recent posts
about
Category: Uncategorized
-
அன்புராஜ் அண்ணன் குறித்த காணொளியை ஒரு ஆறு வருடங்களுக்கு முன்பாக சமூக வலைதளத்தில் பார்த்தேன். இள வயதிலேயே சமூக விடுதலைக்கான போராட்டத்தை சாகச மனநிலையுடன், ஆயுதம் ஏந்தி வீரப்பனுடன் காடுகளில் தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கியுள்ளார். காடு மலை விலங்குகள் என அவற்றின் ஊடாகவே தன் வாழ்வியலை தகவமைத்துக் கொண்டார். காட்டுயிர் குறித்தான புறிதலை தீவிரமாக உள்வாங்கிக் கொண்டார். அதன் பின்னர் தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை பாதை தவறு என உணர்ந்து வெளிவர முயல்கையில் கைதியாக சிறை…
-
அரவிந்த் குப்தா அவர்கள் குக்கூ காட்டுப்பள்ளி திறப்பு விழாவிற்கு வந்திருந்த பொழுது, அவரை அழைத்து கொண்டு புளியனூர் கிராமத்திற்கு சென்றோம். அங்கு நானும் பொன்மணியும் நண்பர்கள் உதவியுடன் ஒரு தையல் பள்ளி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்து வைத்திருந்தோம். நான்கு தையல் இயந்திரங்கள் கொண்ட அழகான சிறு ஓட்டு வீடு. அதனை திறந்து வைத்து தீபம் ஏற்றி எங்களுடன் உரையாடினார். இந்த தையல் பள்ளி துவங்குவதற்கான காரணத்தை சிவராஜ் அண்ணன் தவிப்புடன் கூற அதனை கௌஷிக் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து…
-
பிங்க் நிற திரைச்சிலையை விளக்கியபடி எட்டிப் பார்க்கும் ஒரு நிர்வாண பாலகனின் முழு நீள கண்ணாடி ஓவியத்தை பார்ப்பதற்காகவே அப்பாவுடன் சலூன் கடைக்கு சிறு வயதில் சென்று இருக்கிறேன். ஓவியங்கள் மீதான பிரேமை அப்போதிலிருந்து தான் தொடங்கி இருக்க வேண்டும். இன்று வரை கவிதைக்கு இணையாகவே ஓவியங்களை இன்னும் எத்தனை விதமாக விரித்துப் பார்க்கலாம் என மனம் ஏங்கும். நேற்று உக்கிரமான மத்திய பொழுதில் ஐவர் படையென சிவராஜ் அண்ணா உடன் கிளம்பி சித்தன்னவாசல் குகை ஓவியத்தை…